ADSENSE

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஆராய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி ஆராய உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில், 10 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

இதனால் திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் படி தேர்வுகளை நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

அந்த குழுவின் பரிந்துரைப்படி, தமிழக அரசு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments