ADSENSE

அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை

 தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை!


பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று மேற்கொள்ளவும், 24ம் தேதியிலிருந்து மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவும்  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

 


பள்ளியில் சேர உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும், சேர்க்கை அனுமதித்த பின்னர் அந்த ஆவணங்களை பள்ளிகள் பெற்றுக்கொள்ளும்படியும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோகமும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளும் இன்று முதல் தொடங்குகிறது.

Post a Comment

0 Comments