⭕கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த இயலாது என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கல்லூரி பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்துவது சிரமம். பிற மாநில, மாவட்ட மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிக்கல் உள்ளதால் தேர்வு நடத்த முடியாது. தமிழகத்தில் பல கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதும் ஒரு காரணம். பருவத் தேர்வு நடத்துவதில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளை உயர்கல்வித்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும்
⭕ அந்தந்த மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துமாறு முதல்வர் கோரிக்கை
⭕ பருவத் தேர்வு தொடர்பான முடிவுகளை மாநில அரசுகளே எடுக்க அதிகாரம் தேவை. ஆன்லைன் மூலம் இறுதி பருவத் தேர்வுகளை நடத்துவதில் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் நேரிடும். கல்லூரி தேர்வை செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME