சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த அடுத்த மாதம் 15ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் 25 முதல் ஜூலை 14 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள குறைவழுத்த மின் நுகர்வோர்கள், மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஜூலை 15 வரை தாமதக் கட்டணமோ, மறு மின் இணைப்பு கட்டணமோ இல்லாமல் மின் கட்டணத்தை மட்டும் செலுத்தலாம் எனவம் கூறப்பட்டுள்ளது. அதே போல்
அதே போல் முழு ஊரடங்கு காலமான ஜூன் 19 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் மின் கணக்கீட்டு தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோருக்கு, முந்தைய மாத மின் கணக்கீட்டுபட்டியல்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் ஜூலை 15 வரை மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME