ADSENSE

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படும் ஃபேபிபுளூ மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பார்மாக்யூடிகல் மருந்து நிறுவனத்தின் ஃபேவிபிரவிர் (FAVIPIRAVIR) மருந்துக்கு  அனுமதி வழங்கியுள்ளது. FabiFlu என்ற பெயர் கொண்ட மருந்தை கரோனா பாதித்து லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் விலை ஒரு மாத்திரை 103 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருந்துச் சந்தையில், இந்த மருந்து 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக ரூ.3,500க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில், ஃபேபிஃப்ளூ (FabiFiu) மருந்துதான், முதல் முறையாக கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வாய் வழியாக அளிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் முதல் மருந்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் ஓட்டை விட எங்களின் உயிர் கேவலமாக போய்விட்டது...அரசுக்கு...


எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லி ஒரு நபருக்கு ஆயிரம் தரும் அரசியல்வாதிகள்...

ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால் 5000 ரூபாய் தருகிறார்கள்...

எங்கள் வாழ்வாதார உதவிக்காக எங்களின் வரிப்பணத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்...

நன்றாக உழைக்கும் எங்களிடம் வெளியே செல்லக்கூடாது என்று கொரோனாவால் ஊரடங்கு போட்ட
அரசு தரும் ஆயிரம் ரூபாய், அடுத்த வேலை சோத்துக்கே பத்தவில்லை..

கொரோனா மருந்திர்க்கு ஒரு அட்டை 3,000 ரூபாயில் இருந்து 3500 ரூபாய் எங்கே செல்வது...

சாமானியனின் கேள்வி...

கொரோனா தொற்றுக்கு மருந்து...

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு .
 ஃபேவிபிராவீர் (ஃபேவிபுளூ) என்ற பெயரிலான மாத்திரை இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடும் என கூறப்படுகிறது. 

கிளென்மார்க் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த வைரஸ் எதிர்ப்பு மாத்திரைக்கு, இந்தியாவில் குறிப்பிட்ட பிரிவுகளை சேர்ந்த மருந்து பொருட்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ.) ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படும் ஃபேபிபுளூ மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  

இந்த மாத்திரை மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும். 

 மருந்து சீட்டில் டாக்டர் எழுதி தந்த பின்னரே இந்த மாத்திரை தேவையானவர்களுக்கு விற்க அனுமதிக்கப்படும்.

சாமானிய மக்கள் மத்தியில் இந்த மாத்திரையை வாங்க ஒரு ஆட்டை குறைந்தபட்சம் 3,500 ரூபாய் செலவாகிறது...

அரசு ஆயிரம் ரூபாய் தந்துவிட்டு... கரண்ட் பில், மருந்து மாத்திரை, கொரோனா செக்கப், என்று லட்சக்கணக்கில் பணம் செலுத்தி தான் நம்மை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது...

Post a Comment

0 Comments